இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை 8 ஆயிரத்து 800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியூகோமைகோசிஸ் (mucormycosis) என அழைக்கப்படுகின்ற இந்த நோய் இந்தியாவின் 29 மாநிலங்களிலும் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொற்று நோயாக அறிவிக்குமாறு மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் இந்த நோய் தாக்கம் வேகமாக பரவி வருவதால் இதனை சமாளிப்பது கடினமாகவுள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக மகராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகளவு கறுப்பு பூஞ்சை தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், குறித்த தொற்று கொரோனா தொற்றை விட சவாலாக உள்ளதாகவும் மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.