மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்ட 1,25,000 பேரை அந்நாட்டு இராணுவம் பணி இடைநீக்கம் செய்துள்ளது.
இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொண்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர 19,500 பல்கலைக்கழகத்தின் பணியாளர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது.
மியன்மாரில் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 2 ஆண்டுகளில் 4.3 இலட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் மியன்மார இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைண்ட் உட்பட ஆளும் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தலைவர்களை கைது சிறை வைத்துள்ளது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை இராணுவம் அறிவித்துள்ளது.
இராணுவத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராக மக்கள் பலர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், போராட்டத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக இராணுவம் ஒடுக்கி வருகிறது.
தற்போதுவரை மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.