தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட சட்டமூலம் ஹொங்கொங் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 40 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின. ஹொங்கொங் சட்டப்பேரவை உறுப்பினர்களில் பெரும்பாலானோர் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதால் இந்த சட்டமூலம்எளிதில் நிறைவேறியது.
இந்த சட்டமூலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 35இல் இருந்து 20ஆக குறைக்கப்பட்டும், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 90ஆக உயர்த்தப்பட்டும் உள்ளது.
மொத்த உறுப்பினர்களில் 40 உறுப்பினர்களை சீனாவுக்கு ஆதரவான தேர்தல் குழு தேர்வு செய்யும் அதிகாரம் இந்த மசோதாவில் உள்ளது.
மேலும், சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை தேசிய பாதுகாப்புத் துறை ஆய்வு செய்யும். அவர்கள் தேசப்பற்று கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.