கொரோனா தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்து ஜுன் மாதம் 30 ஆம் திகதிவரை பின்பற்றும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘ கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உள்ள பகுதியை தனிமைப்படுத்துவது, சிகிச்சைக்கு தேவையனா ஒக்சிஜன் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை தடையின்றி வழங்குவது போன்றவற்றால் கொரோனா பரவல் குறைந்துள்ளது.
எனினும் பாதிக்கப்பட்டோர் விகிதம் அதிகமாக உள்ளது. எனவே ஏற்கனவே அறிவித்த கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை ஜுன் மாதம் 30 வரை கட்டாயம் பின்பற்றவும்.
உள்ளூர் பாதிப்பு நிலவரத்தை ஆராய்ந்து விதிமுறைகளை படிப்படியாக தளர்த்துவது குறித்து அந்தந்த மாநிலங்கள் தீர்மானிக்கலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.