இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 912 பேரில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி கொழும்பில் நேற்று மாத்திரம் 490 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமாக 63 பேர் கல்கிஸ்ஸயிலும் 51 பேர் மொராட்டுவையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் கொழும்பில் மாத்திரம் 49 ஆயிரத்து 737 பேர் அடையாளம் காணப்படுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
ஏனைய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளின் விபரம் வருமாறு..