அடுத்த 20 ஆண்டுகளுக்கு, பல அவசர சுகாதார சவால்கள் ஏற்பட போகின்றன என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது என சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் 149 ஆவது நிர்வாக வாரிய கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ” அடுத்த 20 ஆண்டுகளுக்கு, பல அவசர சுகாதார சவால்கள் ஏற்பட போகின்றன என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது.
இந்த அனைத்து சவால்களுக்கும், பகிரப்பட்ட நடவடிக்கை தேவை. ஏனென்றால், இவை பகிரப்பட்ட அச்சுறுத்தல்கள். இதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.
உலகம் ஒரு குடும்பம் என்பதுதான் இந்திய தத்துவம். ஆகையால் நாம் உலக சமுதாயத்துடன் இணைந்து திறம்பட பணியாற்றி, நமது பொது சுகாதார கடமைகளை செய்ய வேண்டும்.
சுகாதாரத்துக்கான தடுப்பூசிகள் வசதியான மற்றும் வசதியற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.