கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு இதுவரை கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டாமென அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் தலைவர் மூத்த பேராசிரியர் அர்ஜுன டி சில்வா இலங்கைக்கு ஏற்படும் ஆபத்தை சுட்டிக்காட்டி இந்த விடயம் குறித்து எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் வகைகளுக்கான சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதிக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, நாட்டில் சுமார் 2000 சுற்றுலாப் பயணிகள் உள்ளனர். ஜூன் முதலாம் திகதி விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து 19 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.
எவ்வாறிருப்பினும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு காரணமாக, இந்தியா மற்றும் வியட்நாமில் இருந்து பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.