நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை), அலரி மாளிகையில், சீரற்ற காலநிலை தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அவர்களுக்கான நிவாரணங்களை அந்தந்த மாவட்ட செயலாளர்களின் ஊடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
குறித்த செயற்றிட்டத்திற்கு தேவையான நிதியை விரைவாக ஒதுக்குமாறு, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவுக்கு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.