யாழ்ப்பாணத்தில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்கள் 26 பேர் இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்- குடாரப்பு கடற்கரையில் தங்கி இருந்து கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த, மன்னார் மற்றும் கல்பிட்டி மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்களிடம் இருந்து 11 படகுகளும் அதன் வெளியிணைப்பு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அனுமதிப்பத்திரம் இல்லாமல் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே குறித்த மீனவர்களை, கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களமும் கடற்படையும் இணைந்து கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.