காக்கைதீவு கடற்றொழிலாளர் இறங்குதுறையை விஸ்தரித்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
நேற்று(ஞாயிற்றுக்கிழமை) குறித்த இறங்கு துறைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்களினால் அமைக்கப்படவுள்ள இளைப்பாறு மண்டபத்திற்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்ததுடன் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் அசௌகரியங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தார். இதன்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும் கடந்த 2000ஆம் ஆண்டு, சுமார் 400 படகுகள் தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில், அமைக்கப்பட்ட 50 அடி நீளமான இறங்கு துறையே தற்போதும் காணப்படுவதாகவும், தற்போது சுமார் 800 படகுகள் சேவையில் ஈடுபட்டுள்ள நியைில், இறங்கு துறையை விஸ்தரத்தித்து தருமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.
















