இந்தியா, வியட்நாம், தென்னாப்பிரிக்க நாடுகள் மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்குள் வந்தவர்கள் தனிமைப்படுத்தல் மையத்தில் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருந்தாலும் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஏனைய நாடுகளிலிருந்தும் நாட்டுக்குள் பிரவேசிக்கும் இலங்கையர்கள் அல்லது இரட்டை குடியுரிமை பெற்றவர்களும் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருந்தாலும் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொரோனா தொற்று ஏற்படவில்லையாயினும், கட்டாய 14 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு நாட்டில் இருந்தும் அனைத்து இலங்கையர்களும் அல்லது இரட்டை குடியுரிமை பெற்றவர்களும் ஆங்கில மொழியில் உள்ள COVID-19 சோதனை அறிக்கையை கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து இலங்கை குடிமக்களும் கட்டாயமாக விமானத்தில் ஏறுவதற்கு 96 மணி நேரத்திற்குள் செய்யப்படும் எதிர்மறை பி.சி.ஆர் பரிசோதனையோ அல்லது இறங்குவதற்கு 48 மணி நேரத்திற்குள் விரைவான அன்டிஜென் சோதனையோ மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் எதிர்மறையான பி.சி.ஆர் சோதனை அறிக்கையை 96 மணி நேரத்திற்குள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.