டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிறார்களுக்கான தடுப்பூசி இன்று (திங்கட்கிழமை) முதல் பரிசோதனை முறையில் செலுத்தப்படவுள்ளது.
இதன்படி குறித்த திட்டம் பீகார் மாநிலத்தின் பாட்னாவில் ஆரம்பமாகியுள்ளது. முதலாவதாக கொவாக்சின் தடுப்பூசியை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 525 பேருக்கு தடுப்பூசி போடப்படவுள்ள அதேநேரம், இரண்டு வயது முதல் 18 வயதுடையோருக்கு 28 நாட்கள் இடைவெளியில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் 12 வயது முதல் 18 வயதுடையோருக்கும், பிறகு 6 வயது முதல் 12 வயதுடையோருக்கும் அதனைத் தொடர்ந்து 2 வயது முதல் 6 வயதுடைய குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.