நாடாளுமன்றக் கூட்டத் தொடரை இந்த வாரம் ஒருநாள் மட்டுமே நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் அமர்வை நான்கரை மணி நேரத்திற்கு மட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களில் நாடாளுமன்ற பாதுகாப்புடன் இணைக்கப்பட்ட 10 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.