பாகிஸ்தானில் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுவதுடன் தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றனர். ஆகவே இத்தகைய செயற்பாட்டினை தடுப்பதற்கு சட்டரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘பத்திரிகையாளர்களைப் பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில், இந்த வழக்குகள் மிகவும் முக்கியமானவை. ஆகவே பொலிஸார், குற்றவாளிகளுக்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கைகள் வெளிப்படையானதாக காணப்பட வேண்டும்.
ஏனென்றால் இந்த சம்பவத்தை ஒரு தாக்குதலுக்கான சம்பவமாக மட்டும் பார்க்காமல், ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களின் ஆபத்தான போக்கின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும்.
அண்மையில் நாட்டின் ஸ்தாபனத்தை விமர்சித்து வந்த பாகிஸ்தான் ஊடகவியலாளரான ஆசாத் அலி டூர், இஸ்லாமாபாத்திலுள்ள அவரது குடியிருப்பில் வைத்து தாக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஆசாத் அலி டூர் கூறியுள்ளதாவது, “இந்த ஆட்சியில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுகிறன.
பாகிஸ்தான் அரசு பல சட்டவிரோத செயல்களைச் செய்ததே இதற்குக் காரணம். அந்த சட்டவிரோத செயல்களை தொடர்ந்து வழங்காதமையால் இப்போது அவர்கள் விரக்தியடைகிறார்கள்.
இதேவேளை ஒரு அறிக்கையில், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் முன்பு உறுதியளித்திருந்தது.
அத்துடன், தேசிய சட்டமன்றம் மற்றும் சிந்து சட்டமன்றத்தில், ஊடகவியலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கான சட்டங்களை இயற்றுவதற்கான நடவடிக்கையிலும் அரசாங்கம் இருந்தது.
மேலும் ஊடகவியலாளர்கள் அல்லது ஊடக பயிற்சியாளர்கள் வழங்கிய முறைப்பாடுகளை கண்டறிந்து, ஒரு தாக்குதலை விரைவாக விசாரிக்கவும் ஒரு சம்பவத்தின் விரைவான விசாரணையை உறுதிப்படுத்தவும் ஒரு ஆணையகத்தை அமைப்பதற்கு மசோதாக்களை முன்மொழிகின்றன.
இருப்பினும் இந்த மசோதாக்கள், நீண்ட காலமாக தாமதமாகிவிட்டன. இந்நிலையிலேயே இந்த மசோதாக்களை விரைவாக நிறைவேற்றுவதன் அவசியத்தை வழக்குகள் எடுத்துக்காட்டுகின்றன
ஆகவே இஸ்லாமாபாத் பொலிஸார் இத்தகைய துயர சம்பவம் தொடர்பாக மிகவும் விழிப்புடனும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்.
பாகிஸ்தான், ஊடகவியலாளர்களுக்கு உலகின் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்றாகத் தொடர்ந்து காணப்படுகின்றது.
மேலும் பாகிஸ்தான் மின்னணு குற்றச் சட்டம் 2016 (PECA) இன் கீழ் நாட்டின் இராணுவத்தை விமர்சித்ததற்காக அதிகமான எழுத்தாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
சுதந்திரமான பேச்சை மெளனமாக்க செய்வதற்கு கடுமையான கருவியாகக் கருதப்படும் PECA, ‘அவதூறு’ என்று கருதப்படும் எந்தவொரு பேச்சையும் அரச நிறுவனங்களை விமர்சிப்பவர்களையும் கூட குற்றவாளியாக்குகிறது.
அண்மையில் PECA இல் ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. பாகிஸ்தானின் ஆயுதப்படைகளை வேண்டுமென்றே கேலி செய்வது, இழிவுபடுத்துவது அல்லது அவதூறு செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் மற்றும் 3,018 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த 2020 உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் 180 நாடுகளில் பாகிஸ்தான் 145 வது இடத்தில் உள்ளது. இது 2019யை விட மூன்று இடங்கள் குறைவாக உள்ளது” என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.