மருத்துவ பரிந்துரைகள் இல்லாமல் நோயாளிகளுக்கு ஒக்ஸிஜனை வழங்குவதைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் ஊடாகப் பேச்சாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயம் தொடர்பாக அறிவித்துள்ளார்.
மருத்துவ பரிந்துரை இல்லாமல் அதிக ஒக்ஸிஜன் வழங்கப்பட்டால், பாதகமான நிலைமை ஏற்பட அதிக ஆபத்து உள்ளது என கூறினார்.
கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சை நிலையங்களுக்கு ஒக்ஸிஜனுக்கான தேவை அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
நோயாளிகளுக்கு முன்கூட்டியே சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் ஒக்ஸிஜனுக்கான தேவையும் அதிகரித்துள்ளது என வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.