இலங்கையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பதிவான கொரோனா நோயாளிகள் தொடர்பான மாவட்ட ரீதியிலான தகவலை கொரோனா கட்டுப்பட்டு நிலையம் அறிவித்துள்ளது.
அதன்படி அதிகளவிலான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் குறித்த தரவுகள் காட்டுகின்றன.
அந்தவகையில் கொழும்பில் 602, கம்பஹா 434, குருநாகல் 270, மட்டக்களப்பு 222, நுவரெலியா மற்றும் இரத்தினபுரியில் தலா 119 பேரும் களுத்துறை 113, கண்டியில் 99 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காலி 89, கேகாலை மற்றும் ஹம்பாந்தோட்டையில் தலா 65, யாழ்ப்பாணம் 63, திருகோணமலை 58, மாத்தளை 54, அனுராதபுரம் 54, வெளிநாடுகளில் இருந்து தயக்கம் திரும்பிய 45 பேரும் இதில் அடங்குகின்றனர்.
இதேவேளை கிளிநொச்சியில் 39 பேர், பதுளை மற்றும் மாத்தறையில் 35 பேர், மொனராகலை 33, அம்பாறை 25, வவுனியா 14, முல்லைத்தீவு 11, மன்னர் 9, புத்தளம் 7, பொலநறுவையில் 4 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.