மாநிலங்களுக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை வீணடிப்பது, தடுப்பு மருந்து ஒதுக்கீட்டை பாதிக்கும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு திருத்தி அமைத்துள்ளது.
இதன்படி மக்கள் தொகை, நோய் தாக்கத்தின் சுமை, தடுப்பூசி திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், தடுப்பு மருந்துகளை வீணடித்தால் மாநிலங்களுக்கான விநியோகம் குறைக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து வருவாய்ப் பிரிவினரும் இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும், வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் தனியார் தடுப்பூசி முகாம்களை நாடலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.