கடுமையான தொழிற்துறை கொள்கையுடன் கூடிய சட்டத்தை அமெரிக்க செனட் சபை நேற்று பெரும்பாண்மை வாக்குகளுடன் நிறைவேற்றியுள்ளது.
சீனாவிடமிருந்து அதிகரித்து வரும் தொழில்நுட்ப அச்சுறுத்தலை எதிர்கொள்ளவதை நோக்கமாகக் கொண்டு இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டத்திற்கு அமெரிக்க செனட் சபையில் ஆதரவாக 68 வாக்குகளும் எதிராக 32 வாக்குகளும் செலுத்தப்பட்டன.
அமெரிக்க தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளுக்காக இந்த நடவடிக்கை சுமார் 190 பில்லியன் அமெரிக்க டொலர்களை அங்கீகரிக்கிறது.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் குவாண்டம் அறிவியல் போன்ற முக்கிய துறைகளில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்காக தேசிய அறிவியல் அறக்கட்டளையின் நடவடிக்கைகளுக்கு இது ஐந்து ஆண்டுகளில் 120 பில்லியன் டொலர்களை அங்கீகரிக்கிறது.
இந்த நடவடிக்கை தனியார் நிறுவனங்களுக்கும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான பிணைப்பை எளிதாக்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.