ஐக்கிய தேசியக் கட்சியில் அண்மையில் இணைந்தவர்களை ரணில் விக்ரமசிங்க தவறாக வழிநடத்த கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
கட்சியின் புதிய உறுப்பினர்களை தவறாக வழிநடத்த அனுமதிக்கக் கூடா என்றும் அது சாத்தியமற்ற விடயம் என்பதால் ஐக்கிய மக்கள் சக்தியை எதிர்கொள்ள முயற்சி செய்யுமாறும் அவர் தெரிவித்தார்.
ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினராக 50 உறுப்பினர்களை எதிர்கொள்ள முடியாது என்பதால் ஒரு மூத்த அரசியல்வாதியாக ரணில் விக்ரமசிங்க இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்வார் என நம்புவதாகவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
மேலும் அவர் நாடாளுமன்றம் வருவதற்கு தங்கள் எதிரானவர்கள் அல்லர் என குறிப்பிட்ட ராஜித சேனாரத்ன, ஐக்கிய தேசியக் கட்சியில் தோற்கடிக்கப்பட்ட உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் என்ற ரணில் விக்ரமசிங்கவின் கருத்தையும் நினைவுபடுத்தினார்.