சீனாவுடனான அசல் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் படை விலகல் செயன்முறை இன்னும் நிறைவு பெறவில்லை என வெளியுறவு அமைச்சகத் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
எல்.ஏ.சியில் மோதல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் சீனாவின் படைவிலகல் நடைவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், எல்லைப் பகுதிகளில் அமைதி நிலைநாட்டப்படும். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஒட்டுமொத்த முன்னேற்றம் இருக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளின் படைகளும் கடந்த ஆண்டு முதல் எல்.ஏ.சி யில் லடாக்கில் எதிரெதிர் நின்று வருகின்றன. அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைக் குறைக்கப் பல சுற்றப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
எவ்வாறாயினும் ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குப் பிறகும் இந்த செயல்முறை இன்னும் நிறைவடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.