மட்டக்களப்பில் பயணக் கட்டுப்பாட்டை மீறி செயற்படுவோரை கண்டறியும் சோதனை நடவடிக்கைகள், பொலிஸாரினால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
அண்மையில் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில், அதிகளவானோர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர்.
ஆனாலும் பெரும்பாலானோர், பயணத் தடைகளை மீறி தொடர்ந்து செயற்படுகின்றனர்.
இந்நிலையிலேயே கொரோனா தொற்றினை குறைக்கும் நோக்கில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து இன்று காலை விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள பிரதான வீதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது பயணத்தடையினை மீறி பயணங்களை மேற்கொண்ட பலர், கடுமையாக எச்சரிக்கப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.