ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
செம்மண் தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க இத்தொடரில், தற்போது ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
இதில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதிப் போட்டியொன்றில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் ஸிட்சிபாசை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஸ்டெபீனோஸ் ஸிட்சிபாஸ் 6-3, 6-3, 4-6, 4-6, 6-3 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியொன்றில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரபேல் நடாலை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நோவக் ஜோகோவிச், 3-6, 6-3, 7-6, 6-2 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.