எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தைத் கடுமையாக சாடியுள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலைகளை நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அறிவித்திருந்தது.
இந்த அரசாங்கம் தொடர்பாக வெட்கமடைவதாகவும் இது முழு நாட்டிற்கும் ஒரு துன்பகரமான நிகழ்வு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக ரீதியாக நாட்டை ஆள முடியாது என்பதை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே இந்த நாட்டிற்கு செழிப்பையும் வளர்ச்சியையும் கொண்டு வர முடியும் என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.