கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடுவதனை தவிர்த்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு நிலைவரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, “ஊரடங்கு காலத்தில் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் ஆகியவற்றில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் கடைகளின் நுழைவாயில்களிலேயே வாடிக்கையாளர் தங்களது கைகளை கழுவிக்கொள்வதற்கு கைசுத்திகரிப்பான்கள் வைக்கப்பட வேண்டும் என்பதுடன் உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
அத்துடன் கடைகளிலுள்ள ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதனை சம சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து கடைகளும் குளிர்சாதனவசதி இல்லாமல் செயற்பட வேண்டும் என்பதுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
இதேவேளை மக்கள் அனைவரும் அவசியமின்றி வெளியில் நடமாடுவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.