தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டீனாவில் சீனாவின் கான்சினோ தடுப்பூசிக்கு, அவசர கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சீனாவின் கான்சினோ தடுப்பூசி ஒரே டோஸ் தடுப்பூசி ஆகும். முதற்கட்டமாக 54 இலட்சம் கான்சினோ தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக அர்ஜெண்டீனா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அங்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி, அஸ்ட்ராஸெனகா, சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
சுமார் 4.5 கோடி மக்கள் தொகையை கொண்ட அர்ஜெண்டீனாவில், தற்போது வரை 1.2 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 32 லட்சம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ள ஒன்பதாவது நாடாக விளங்கும் அர்ஜெண்டீனாவில், இதுவரை 4,093,090பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 84,628பேர் உயிரிழந்துள்ளனர்.