எரிபொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து விளக்கமளிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, இன்றைய தினம் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அதற்கான பதிலை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்கள் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ள காலப்பகுதியில் எரிபொருட்களின் விலையை அதிகரித்தமைக்கான பொறுப்பை ஏற்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரியுள்ளது.
விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் இதற்கு நேரடி பொறுப்புக்கூற வேண்டும் எனவும் இவ்வாறான நிலைமையை ஏற்படுத்தியமைக்கான முழுமையான பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவி விலக வேண்டும் எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.