கொரோனா கட்டுப்பாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருவது குறித்த தீர்மானத்திற்கு முன்னர் அரசாங்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்தார்.
டெல்டா மாறுபாடு பரவுவதால் கொரோனா தொற்று நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 21 அன்று இங்கிலாந்தில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பிற்கு மக்கள் அனைவரும் திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டும் என்றும் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்தார்.
இங்கிலாந்தில் சனிக்கிழமையன்று மேலும் 7,738 நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன் கடந்த 28 நாட்களுக்குள் மேலும் 12 இறப்புக்களும் பதிவாகியுள்ளன.