ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலட்சக்கணக்கான சமூக ஊடகப் பயனர்களில், 16 வயதுக்கு மேற்பட்டவர்களைக் கண்டறிவதற்கான மிகச் சிறந்த வழிமுறைகள் குறித்த பரிந்துரைகளை தகவல் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தில் அடுத்த ஆண்டு மார்ச் முதல் நடைமுறைக்கு வரவுள்ள சமூக ஊடகத் தடையின் கீழ், 16 வயதிற்குட்பட்டவர்கள் இன்ஸ்டாகிராம் , டிக்டொக் மற்றும் ஸ்னாப்சாட் (Snapchat) உள்ளிட்ட பத்து முக்கிய சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்த முடியாது.
அரசாங்கத்தின் அனுமதிக்கு உட்பட்ட இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பெரியவர்களும் தாங்கள் 16 வயதிற்குட்பட்டவர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது .
அந்தச் சவாலை எதிர்கொள்ளும் வகையில், பாரம்பரிய அடையாள முறைகளுடன் மேலதிகமாக மக்களின் வயதைக் கணிப்பதில் “மிகவும் பயனுள்ளதாக” இருக்கும் என்று கூறும் நான்கு முறைகளை தகவல் தொடர்பு அலுவலகம் பரிந்துரைத்துள்ளது:
















