அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலம் இந்த வாரம் மேலதிக கொரோனா கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதாக அறிவிக்கும் என எதிர்பார்க்கிறது.
சமீபத்திய நோயாளிகள் முன்னர் அடையாளம் காணப்பட்ட ஒருவரியில் நெருங்கிய தொடர்பு மற்றும் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த நோயாளிகள் என விக்டோரியாவின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அவுஸ்ரேலியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் சமீபத்தில் 92 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த அதிகரிப்பு கடந்த மாத இறுதியில் இரண்டு வார முடக்கத்தை அறிவிக்க தூண்டியது என அரசாங்கம் அறிவித்தது.
இருப்பினும் சில தளர்வுகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.