உலகின் பல நாடுகளுக்கு 60 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதாக பிரான்ஸ் உறுதியளித்துள்ளது.
47ஆவது ஜி-7 உச்சிமாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வின் போது இத்தகவலை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்தார்.
உலகம் முழுவதும் பரவலாக பல நாடுகளுக்கு தடுப்பூசிகளை பிரான்ஸ் வழங்கும் எனவும், மொத்தமாக 60 மில்லியன் அலகுகளை பிரான்ஸ் வழங்க உள்ளதாகவும் மக்ரோன் குறிப்பிட்டார்.
இதில் பாதி எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் இவ்வருடத்தின் இறுதிக்குள்ளும், மீதமானவை 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள்ளும் வழங்கப்படும் எனவும் மக்ரோன் தெரிவித்தார்.
முன்னதாக உலகின் பிற நாடுகளுக்கு நூறு கோடி அளவு தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் என பிரித்தானியா அறிவித்திருந்தது.
பிரித்தானியா மட்டும் உபரியாக உள்ள சுமார் 10 கோடி அளவுகள் கொரோனா தடுப்பூசியை வழங்கும் எனவும் அமெரிக்கா 50 கோடி அளவு கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அளிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.