பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து, மத்தியபிரதேசம் இந்தூரில் வாழ்கின்ற இந்து சிந்தி சமூக மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
குறித்த சமூகத்திலுள்ள சுமார் 5 ஆயிரம் பேருக்கு இந்த கொரோனா தடுப்பூசியை செலுத்தவுள்ளதாக மாநில அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மையில் இந்த சமூகத்தின் பிரதிநிதிகள், தங்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த கோரிக்கையை மாநில அரசு ஏற்றுக்கொண்டது.
மேலும் பாகிஸ்தானிய அகதிகள், இந்தூர் நகர கொரோனா தடுப்பூசி மையங்களில், தங்களின் கடவுச்சீட்டு அடையாள அட்டையை காண்பித்து, தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியுமென அதிகாரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.