நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை ஜூன் 21ஆம் திகதி நீக்குவதாக எடுக்கப்பட்ட முடிவு இறுதியானது அல்ல என்று அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல ஜூன் 21ஆம் திகதி பயணத் தடையை நீக்குவது குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை என தெரிவித்தார்.
தடையை நீக்குவது குறித்து தற்போது கணிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் ஏற்படும் முன்னேற்றங்களின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை ஜூன் 7ஆம் திகதி நீக்கப்படும் என்று அரசாங்கம் ஆரம்பத்தில் அறிவித்திருந்தது. எனினும் பின்னர் குறித்த தடை ஜூன் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, இந்த தடை ஜூன் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், பயணத்தடை ஜூன் 28ஆம் திகதி வரை நீடிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.