ஐக்கியத் தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளதாக அந்தக்கட்சி அறிவித்துள்ளது.
அதன்படி, இன்றையதினம் (புதன்கிழமை) இந்த விடயம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரிய அளவிலான தோல்வியை சந்தித்த ஐக்கியத் தேசியக் கட்சிக்கு தேசிய பட்டியல் ஆசனம் மட்டுமே கிடைத்தது.
இந்நிலையில் தேர்தல் இடம்பெற்று கடந்த ஓராண்டுக்கு பின்னர் பல இழுபறிக்கு மத்தியில் தேசியப் பட்டியலுக்கான உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டார்.
அதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன கடந்த மே 31ஆம் திகதி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.