இந்தியாவில் முதன் முறையாக பச்சை பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் அரவிந்தோ மருத்துவமனையில் கடந்த ஒன்றரை மாதங்களாக கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சைப் பெற்று வந்த 34 வயதுடைய நபர் ஒருவரே மேற்படி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது நுரையீரல் பாதிப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது குறித்த நோய் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மும்பை நகருக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய பலர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இதற்கு அடுத்ததாக வெள்ளை பூஞ்சை தொற்றும் இனங்காணப்பட்டது.
அதனை தொடர்ந்து தோல் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது பச்சை பூஞ்சை தொற்றும் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.