பொருட்களை விநியோகிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரம் மேலும் சில காலங்களுக்கு செல்லுபடியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனுமதிப் பத்திரம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாகியுள்ள இந்தக் காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்காக இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே குறித்த அனுமத்திப் பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.