எஸ். ஹரியதர்ஷனி
பார்ன்ஹம் ( Barnham ) கிராமத்தில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பைக் கவனத்திற்க் கொண்டு, அருகாமையில் தஞ்சம் கோருவோருக்கு வீடுகளை வழங்குவது தொடர்பான திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு உள்ளூர் அரசியல்வாதிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
சுமார் 500 வாக்காளர்களில் 257 பேர் பிரிவதற்கு ஆதரவாகவும், 16 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். எனினும் இவ்வாக்கெடுப்பு சட்டரீதியான அதிகாரத்தைக் கொண்டிராதது என்றும் கூறப்பட்டுள்ளது.
பங்கேற்றவர்களில் 94 % முன்னாள் பார்ன்ஹம் இராணுவத் தளத்தில் புலம்பெயர்ந்தோருக்குக் குடியிருப்பு வழங்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, ஐக்கிய இராச்சியத்தில் இருந்து தனித்து செயற்படும் நடவடிக்கை ஆதரவாக வாக்களித்தனர் .
இந்த அடையாளப்பூர்வமான தீர்மானம் “ஒரு சக்திவாய்ந்த செய்தியை அனுப்புகிறது” எனவும் அரசியல்வாதிகள் செவிசாய்ப்பதை நிறுத்தும்போது சமூகம் சரிவடையத் தொடங்குகிறது” எனவும் சஃபோக் ( Suffolk ) மாவட்ட மன்றத்தின் தலைவர் எச்சரித்துள்ளார் .
அரசாங்கத்தின் தீர்மானத்தை மக்கள் மீது திணிக்க முடியாது என்றும், அரசாங்கம் செவிசாய்க்கத் தொடங்க வேண்டும் என்றும் ஏனெனில், இது போன்ற விடயங்கள் புறக்கணிக்கப்படத் தொடங்கும் போதுதான் சமூகம் வீழ்ச்சியடையத் தொடங்குகிறது எனவும் அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர் .
இதேநேரம் மக்களின் உணர்வுகளின் வலிமையை அங்கீகரிப்பதாகவும், எழுப்பப்படும் கவலைகளைக் செவிசாய்ப்பதாகவும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது .













