• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home தொழில்நுட்பம்
இலங்கைக்குள் ஜப்பானிய சுகாதாரப் பரிசோதனை மையமான NURAவை அறிமுகப்படுத்தும் Hayleys

இலங்கைக்குள் ஜப்பானிய சுகாதாரப் பரிசோதனை மையமான NURAவை அறிமுகப்படுத்தும் Hayleys

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/22
in தொழில்நுட்பம், பிரதான செய்திகள்
66 1
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜப்பானை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய சுகாதாரப் பரிசோதனை மையங்களின் சர்வதேச வலையமைப்பான NURA, Hayleys குழுமத்துடன் இணைந்து இலங்கையில் தனது சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

FUJIFILM DKH LLC நிறுவனத்தினால் இயக்கப்படும் NURA, Hayleys குழுமத்தின் துணை நிறுவனமான Innovative Health Solutions (Pvt) Ltd உடன் மேற்கொண்டுள்ள மூலோபாயக் கூட்டாண்மையின் ஊடாக இலங்கைக்குள் நுழையவுள்ளது.

NURA மையத்தில் மேற்கொள்ளப்படும் முழுமையான சுகாதாரப் பரிசோதனைக்கு பொதுவாக சுமார் 120 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். இதற்காக முன்கூட்டியே உணவு தவிர்ப்பதோ அல்லது மருத்துவரின் பரிந்துரையைப் பெறுவதோ அவசியமில்லை.

வாழ்க்கை முறை தொடர்பான முக்கிய நோய்கள் மற்றும் பொதுவான புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு ஸ்கேன் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மருத்துவர் ஆலோசனை வழங்கப்படுவதுடன், பரிசோதனை அறிக்கையும் அன்றைய தினமே வழங்கப்படும். இதன் மூலம் ஒரே வருகையில் முழுமையான சுகாதாரப் பரிசோதனையை நிறைவு செய்ய முடியும்.

blank

இந்தப் பரிசோதனைகளில் Fujifilm நிறுவனத்தின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஜப்பானிய இமேஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.

குறிப்பாக, வழக்கமான சிடி (CT) ஸ்கேன்களுடன் ஒப்பிடுகையில் 97 சதவீதம் வரை குறைந்த கதிர்வீச்சைப் பயன்படுத்தும் Ultra-low-dose CT தொழில்நுட்பமும் இதில் உள்ளடங்குகிறது. அத்துடன், AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் படங்களின் தரம் மேம்படுத்தப்பட்டு மருத்துவர்களுக்கு நோயறிதல் மற்றும் மருத்துவத் தீர்மானங்களை மேற்கொள்ள உதவுகிறது.

இலங்கையில் NURA சேவையை அறிமுகப்படுத்துவது தொடர்பாக அதன் நிறுவனர் மற்றும் பணிப்பாளரான மசஹாரு மொரிட்டா (Masaharu Morita) கருத்துத் தெரிவிக்கையில்,

ஜப்பானில் வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளதாகவும், நோய் ஏற்படுவதற்கு முன்னரே மக்கள் பரிசோதனைகளை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கலாசாரத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்வதே NURA நிறுவனத்தின் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தியா, மங்கோலியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் ஏற்கனவே தமது பரிசோதனை மையங்கள் இயங்கி வருவதாகவும் அடுத்ததாக இலங்கைக்கு வருவதில் பெருமையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், AI தொழில்நுட்பம் மருத்துவர்களுக்கு உதவுவதுடன், குறைந்த கதிர்வீச்சைப் பயன்படுத்தும் CT ஸ்கேன் தொழில்நுட்பத்தின் ஊடாக வருடாந்த சுகாதாரப் பரிசோதனைகளை எளிதாக்குவதே தமது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

NURA மையம் திறக்கப்படுவதற்கு முன்னதாக மேலதிக தகவல்களையும் அறிவிப்புகளையும் பெற்றுக்கொள்ள விரும்புவோர் www.nurahealth.lk/waitlist என்ற இணையத்தளத்தில் காத்திருப்புப் பட்டியலில் பதிவு செய்துகொள்ள முடியும்.

FUJIFILM Corporation மற்றும் Dr. Kutty’s Healthcare (DKH) ஆகியவற்றின் கூட்டிணைவில் உருவாக்கப்பட்ட NURA, FUJIFILM DKH LLC நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. 2021ஆம் ஆண்டு இந்தியாவின் பெங்களூருவில் தனது முதலாவது மையத்தை ஆரம்பித்த இந்நிறுவனம், தற்போது பல்வேறு நாடுகளுக்கு தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.

Hayleys குழுமத்தின் துணை நிறுவனமான Innovative Health Solutions, நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் மற்றும் தடுப்பு சுகாதாரப் பரிசோதனைத் தீர்வுகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Contact Hayleys | Sri Lanka's Leading Diversified Conglomerate

blank

blank

Related

Tags: HayleysNURA
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக்கான ஒருவார கால விசேட விஜயத்தை நிறைவு செய்த FBI அதிகாரிகள்!

Related Posts

ஒரே வாரத்தில் வெங்காயம், முட்டை விலைகள் கடுமையாக உயர்வு!
இலங்கை

ஒரே வாரத்தில் வெங்காயம், முட்டை விலைகள் கடுமையாக உயர்வு!

2026-11-22
குஜராத்தில் கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!
இந்தியா

குஜராத்தில் கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

2026-11-22
இந்தோனேசியாவில் பயங்கர தீ விபத்து; 36 பேரைத் தேடும் பணி தீவிரம்!
உலகம்

இந்தோனேசியாவில் பயங்கர தீ விபத்து; 36 பேரைத் தேடும் பணி தீவிரம்!

2026-11-22
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்படிக்கை சாதாரண மக்களுக்கும் நன்மையளிக்கும் –  பிரதமர்
இங்கிலாந்து

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்படிக்கை சாதாரண மக்களுக்கும் நன்மையளிக்கும் – பிரதமர்

2026-11-22
அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் பிரபலங்கள் சங்கமம்!
பல்சுவை

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் பிரபலங்கள் சங்கமம்!

2026-11-22
சீரற்ற வானிலை:  பிரித்தானியாவின் பல பகுதிகளில் போக்குவரத்துப் பாதிக்கக்கூடும்
இங்கிலாந்து

சீரற்ற வானிலை: பிரித்தானியாவின் பல பகுதிகளில் போக்குவரத்துப் பாதிக்கக்கூடும்

2026-11-22

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
இலங்கைக்குள் ஜப்பானிய சுகாதாரப் பரிசோதனை மையமான NURAவை அறிமுகப்படுத்தும் Hayleys

இலங்கைக்குள் ஜப்பானிய சுகாதாரப் பரிசோதனை மையமான NURAவை அறிமுகப்படுத்தும் Hayleys

0
இலங்கைக்கான ஒருவார கால விசேட விஜயத்தை நிறைவு செய்த FBI அதிகாரிகள்!

இலங்கைக்கான ஒருவார கால விசேட விஜயத்தை நிறைவு செய்த FBI அதிகாரிகள்!

0
பெறுமதி சேர் வரி செலுத்துவோருக்கான இறைவரி திணைக்களத்தின் அறிவிப்பு!

வரி செலுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை!

0
ஒரே வாரத்தில் வெங்காயம், முட்டை விலைகள் கடுமையாக உயர்வு!

ஒரே வாரத்தில் வெங்காயம், முட்டை விலைகள் கடுமையாக உயர்வு!

0
குஜராத்தில் கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

குஜராத்தில் கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

0
இலங்கைக்குள் ஜப்பானிய சுகாதாரப் பரிசோதனை மையமான NURAவை அறிமுகப்படுத்தும் Hayleys

இலங்கைக்குள் ஜப்பானிய சுகாதாரப் பரிசோதனை மையமான NURAவை அறிமுகப்படுத்தும் Hayleys

2026-11-22
இலங்கைக்கான ஒருவார கால விசேட விஜயத்தை நிறைவு செய்த FBI அதிகாரிகள்!

இலங்கைக்கான ஒருவார கால விசேட விஜயத்தை நிறைவு செய்த FBI அதிகாரிகள்!

2026-11-22
பெறுமதி சேர் வரி செலுத்துவோருக்கான இறைவரி திணைக்களத்தின் அறிவிப்பு!

வரி செலுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை!

2026-11-22
ஒரே வாரத்தில் வெங்காயம், முட்டை விலைகள் கடுமையாக உயர்வு!

ஒரே வாரத்தில் வெங்காயம், முட்டை விலைகள் கடுமையாக உயர்வு!

2026-11-22
குஜராத்தில் கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

குஜராத்தில் கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

2026-11-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: