இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்து செல்கின்றது. அந்தவகையில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 62 ஆயிரத்து 226 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 96 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் 2 கோடியே 83 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
அதேநேரம் 8 இலட்சத்து 72 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அதேநேரம் ஆயிரத்து 470 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 79 ஆயிரத்தை கடந்துள்ளது.