தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் காரணமாக ஏற்படும் கடல் மாசுபாட்டினை நிவர்த்தி செய்ய நோர்வே கடலோர நிர்வாகம் தொலைதூர உதவிகளை வழங்கியுள்ளது.
இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள நோர்வே தூதுவர் ட்ரைன் ஜெரான்லி எஸ்கெடல் (Trine Jøranli Eskedal), நோர்வே நிபுணர்கள் இலங்கை அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தியதாகக் கூறினார்.
நோர்வே கடலோர நிர்வாகத்தின் வல்லுநர்கள் தொலைதூர உதவிகளை வழங்கியுள்ளனர் என்றும் சாத்தியமான உதவியின் ஏனைய வழிகளையும் நோர்வே ஆராய்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் காரணமாக கடல் மாசுபாடடைந்துள்ளது.
இதனால் பல கடல்வாழ் உயிரினங்களும் உயிரிழந்து வருவதுடன், குறித்த பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மீன்வள நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.