கப்பல் விபத்தால் கடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் விசேட குழுவொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதும் அதற்கான எதிர்கால நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த குழுவின் நோக்கம் என அந்த சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் காரணமாக கடல் மாசுபாடடைந்துள்ளது.
இதனால் பல கடல்வாழ் உயிரினங்களும் உயிரிழந்து வருவதுடன், குறித்த பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மீன்வள நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.