மியன்மாரின் 5 நகரங்களில் அல்பா, டெல்டா, கப்பா ஆகிய மரபணு மாற்ற வைரஸ் பரவுவது முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 11 பேரிடம் இந்த வைரஸ் பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் இருவரிடம் அல்பா மரபணு மாற்ற வைரஸ், 5 பேரிடம் டெல்டாவும், 4 பேருக்கு கப்பா ரக மரபணு மாற்ற வைரஸ் தொற்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
யாங்கூன், கலாய், மண்டாலே, மயிக், தமு என நாட்டின் பல பாகங்களில் உள்ள 5 நகரங்களில் இந்த பரமணு மாற்ற வைரஸ் பரவி வருகின்றன.
இந்நிலையில் அல்பா மற்றும் டெல்டா போன்ற புதிய வகைகள் அதிக அளவில் தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் என்பதால், கொரோனா கட்டுப்பாடுகளை அவசியம் பின்பற்றுமாறு அமைச்சு மக்களை எச்சரித்துள்ளது.