கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் குழந்தைகள் வார்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், ‘ கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் அது உறுதிப்படுத்தப்படாத தகவல் என மருத்து நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் ஒக்சிஜன் படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது அலை வந்தாலும் அதை சமாளிக்க போதிய கட்டமைப்புகள் அரசிடம் உள்ளன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் திறந்து வைக்கப்படுகின்றன’ எனத் தெரிவித்துள்ளார்.