டெல்டா பிளஸ் வைரஸ் கவலைதரக்கூடியது அல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்த வைரஸ் பற்றி இன்னும் நாம் நிறைய அறிந்து அதன் முன்னேற்றத்தை கண்காணிக்க வேண்டியுள்ளது.
அதேநேரத்தில் கடந்த மே மாதம் ஏழாம் திகதி உச்சம் தொட்டப்பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு நாட்டில் 85 சதவீத அளவுக்கு குறைந்து விட்டது.
20 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.