2020ஆம் ஆண்டு யு.இ.எஃப்.ஏ யூரோ கிண்ண கால்பந்து தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் நேற்று குழுநிலைப் போட்டிகளின் மூன்றாம் கட்ட போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.
க்ரெஸ்டோவ்ஸ்கி விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், பின்லாந்து மற்றும் ரஷ்யா அணிகள் மோதின.
குழு ‘பி’யில் நடைபெற்ற இப்போட்டியில், ரஷ்யா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இதில் ரஷ்யா அணி சார்பில், அலெக்ஸி மிரான்சுக் போட்டியின் 47ஆவது நிமிடத்தில் அணிக்காக ஒரு கோல் அடித்தார்.
பாகு ஒலிம்பிக் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், துருக்கி மற்றும் வேல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
குழு ‘ஏ’யில் நடைபெற்ற இப்போட்டியில், வேல்ஸ் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இதில் வேல்ஸ் அணி சார்பில், ஆரோன் ரம்ஸி 42ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் கோனர் ரொபட்ஸ் 95ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
ஒலிம்பிக்கோ விளையாட்டரங்களில் நடைபெற்ற போட்டியில், இத்தாலியும் சுவிஸ்லாந்து அணியும் மோதிக்கொண்டன.
குழு குழு ‘ஏ’யில் நடைபெற்ற இப்போட்டியில், இத்தாலி அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றுது.
இதில் இத்தாலி அணி சார்பில், மானுவல் லோகடெல்லி 26ஆவது மற்றும் 52ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களும் சிரோ எம்மோபைல் 89ஆவது நிடமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.