கொரோனா சிகிச்சைகளில் பெரியவர்களுக்கு பயன்படுத்தப்படுகின்ற பெரும்பாலான மருந்துகள் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், இது குறித்த வழிக்காட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி வெவ்வேறு மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பை அடிப்படையாகக் கொண்டு சிறார் சிகிச்சைப் பிரிவுக்கு கூடுதல் படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறார்களுக்கு சிகிக்சை அளிக்க போதிய அளவில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், தனி சிகிச்சைப் பிரிவுகள், கூடுதல் மருத்துவ உபகரணங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து மீண்ட குழந்தைகளுக்கு பல உறுப்புகள் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே அவர்களுக்கு சிகிச்சையளிக்க தனிபிரிவு ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.