தமிழ் மக்கள் மீண்டும் அடக்கப்பட்டு, நசுக்கப்படுகின்றார்கள். ஆகவே அதற்கு எதிராக குரல் கொடுக்க தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் மக்கள் மீண்டும் அடக்கப்பட்டு, நசுக்கப்படுகின்றார்கள்.
அவர்களின் உடமைகள் கபளீகரம் செய்யப்பட்டு, கலாசாரங்கள் மழுங்கடிக்கப்பட்டுகின்றன.
ஆகவே தமிழ்த் தேசியத்தை விரும்பும் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய ஒரு தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.
இதேவேளை மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் கூட தற்போது மத்திய அரசாங்கத்தினால் அபகரிப்பு செய்யப்படுகின்றன.
இந்நிலையில் எதிர்காலத்தில் மாகாணசபை முறைமை இருக்குமோ என்ற சந்தேகம் கூட எழுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.