ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான 17 சம்பவங்கள் குறித்து சி.ஐ.டி. மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விசாரணைகள் தொடர்பாக 32 சந்தேக நபர்கள் மீது கேகாலை, கண்டி, குருநாகல், புத்தளம் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றங்களில் சட்டமா அதிபரால் ஏற்கனவே ஒன்பது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மீதமுள்ள எட்டு விசாரணைகள் குறித்து வழக்கு தாக்கல் செய்ய சி.ஐ.டி., பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் சட்டமா அதிபர் விவாதங்களை நடத்தி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எட்டு சம்பவங்கள் குறித்து விசாரணை முடிந்தவுடன் விரைவில் சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்ய்யப்படும் என்றும் இதற்கான விசாரணைகளிலேயே சி.ஐ.டி. மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.