இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 53 ஆயிரத்து 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 99 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் 2 கோடியே 88 இலட்சம் பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
அதேநேரம் 7 இலட்சத்து 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் நேற்றைய தினம் ஆயிரத்து 113 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 88 ஆயிரத்தை கடந்துள்ளது.