ஹொங்கொங்கின் மிகப்பெரிய ஜனநாயக சார்பு பத்திரிகையான அப்பிள் டெய்லி, தனது நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளது,
தேசிய பாதுகாப்பு சட்டத்தை பல அறிக்கைகள் மீறியுள்ளன என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வாரம் குறித்த அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டன.
இதனை அடுத்து 18 மில்லியன் டொலர் மதிப்புள்ள நிறுவனத்துடன் தொடர்புடைய சொத்துக்கள் பின்னர் முடக்கப்பட்டன.
பின்னர் அதன் தலைமை ஆசிரியர் மற்றும் ஐந்து நிர்வாகிகளையும் பொலிஸார் கைது செய்து தற்போது தடுத்து வைத்துள்ளனர்.
குறித்த பத்திரிகை ஹொங்கொங் மற்றும் சீனா அரசியல் தலைமையை விமர்சிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.