இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தினால் மேலும் 78 ஆயிரம் பைசர் கொரோனா தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மூன்று வாரத்திற்குள் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.